பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல்... தமிழச்சி தங்கப் பாண்டியன் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம்!

 
நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் , தவெக தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது வெளியிட்ட கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.விஜய் அரசியலில் அனுபவமற்றவர் என்றும், முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அவர் விமர்சித்ததாக கூறப்படுகிறது. மேலும், நடிகை த்ரிஷா பெயரை குறிப்பிட்டு கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. “திரிஷாவிடம் இருந்து வெளியே வந்தால் தான் எல்லாமே நடக்கும்” என்ற வகையிலான பேச்சு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறமாட்டார் என்றும், அவருக்கு அடிப்படை அமைப்பு இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார். இந்த கருத்துகள் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து பேசுவது தகாதது என்ற விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.இந்நிலையில், திமுக எம்.பி தமிழச்சி தங்கப் பாண்டியன்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளை முன்வைக்கும் போது பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசுவது அழகல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களை கண்ணியத்துடன் பேசுவது மற்றும் நடத்துவது தான் நாகரீக அரசியல் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழச்சி தங்கபாண்டியனின் இந்தக் கண்டனம் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அரசியல் விவாதங்களில் பெண்கள் குறித்து பொறுப்புடன் பேச வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!