தோழர் நல்லகண்ணு உடல்நிலையில் திடீர் பின்னடைவு... மருத்துவமனை அறிக்கை!
நல்லகண்ணு (101) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். சுதந்திரப் போராட்ட வீரராகவும் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தூணாகவும் விளங்கினார். தொழிலாளர், விவசாயிகள் உரிமைக்காக நீண்ட காலம் போராடினார். வயது முதிர்வு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் டிசம்பர் மாதம் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து கடந்த மாதம் வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய்த்தொற்று, இரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட இணை பிரச்சினைகளும் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. நேற்று அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் அதிகரிக்கப்பட்டு, 24 மணி நேர அதிதீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
