நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

 
நல்லகண்ணு
 

சென்னையில் 100 வயது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மூச்சுத் திணறல் பிரச்னையால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்றிரவு (பிப். 1) அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நல்லகண்ணு

நல்லகண்ணு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தபோது, மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டதால் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அடிக்கடி இந்த பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பியுள்ளார்.

நல்லகண்ணு

ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டதால், நல்லகண்ணு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூத்த மருத்துவர்கள் கண்காணிப்பில், அவருக்கு பாதுகாப்பான மற்றும் தீவிர சிகிச்சை தொடர்ந்துவருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!