பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்த பெருந்தமிழர்... சீமான் தோழர் நல்லகண்ணுவுக்கு புகழஞ்சலி!
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு காலமானார். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 15 நாட்களாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று மாலை முதல் செயற்கை சுவாச கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களின் தீவிர முயற்சியையும் மீறி சற்றுமுன் உயிரிழந்தார். அவரது மறைவு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.பாட்டாளி வர்க்க நலனுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் நல்லகண்ணு. எளிமையும் கொள்கை உறுதியும் கொண்ட தலைவராக அறியப்பட்ட அவர், பல தலைமுறைகளுக்கு முன்னுதாரணமாக இருந்தார். அவரது மறைவுக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்த பெருந்தமிழர்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) February 25, 2026
ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்!
விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி!
வார்த்தைக்கும்,… pic.twitter.com/LoVihOivpm
பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்த பெருந்தமிழர்! ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்! விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி! வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்த பொதுவுடைமை பிதாமகன்! பெருமதிப்பிற்குரிய ஐயா #நல்லகண்ணு அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிய சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்றபோது, ஐயா நம்மை விட்டு மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன் என நாம் தமிழர் கட்சி சீமான் பதிவிட்டுள்ளார்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
