"நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி" - வீடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

 
மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திர வீரரும் ஜாம்பவானுமான லயோனல் மெஸ்ஸி, தனது மூன்று நாள் இந்தியச் சுற்றுப்பயணம் முடிந்து தாயகம் திரும்பிய பிறகு, இந்திய ரசிகர்களின் அன்பு மற்றும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மெஸ்ஸி, தனது சுற்றுப்பயணத்தின் போது தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

முதல்நாளான கொல்கத்தாவில் போதிய திட்டமிடல் இல்லாததால், நிகழ்ச்சி நடைபெற்ற சால்ட் லேக் மைதானம் போராட்டக்களமாக மாறியது. எனினும், அதைத் தொடர்ந்து ஹைதராபாத், தில்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்தச் சுற்றுப்பயணத்தில் மெஸ்ஸி பல மாநில முதல்வர்கள் மற்றும் விளையாட்டுத் துறைப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசினார்:

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஹைதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் நட்புறவு கால்பந்துப் போட்டி. டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஐசிசி தலைவர் ஜெய் ஷா, தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஹன் ஜேட்லி. மும்பை, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

மெஸ்ஸி

இதனைத் தொடர்ந்து, குஜராத் ஜாம்நகர் சென்ற அவர், ஆனந்த் அம்பானியின் 'வன்தாரா' உயிரியல் பூங்காவையும் சுற்றிப்பார்த்துவிட்டு நேற்று தனது தாயகம் திரும்பினார்.

இந்தியா சுற்றுப்பயணம் குறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெஸ்ஸி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: "நமஸ்தே இந்தியா! தில்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா என்ன ஒரு அற்புதமான பயணம். இந்தச் சுற்றுப்பயணம் முழுவதும் அன்பான வரவேற்புக்கும், சிறப்பான விருந்தோம்பலுக்கும், அன்பின் வெளிப்பாட்டுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் கால்பந்துக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் எனக் கருதுகிறேன்." மெஸ்ஸியின் இந்த வீடியோ பதிவு, இந்திய கால்பந்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!