நாஞ்சில் சம்பத்துக்கு தவெக பரப்புரை செயலாளர் பொறுப்பு!
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில், பிரபல அரசியல் பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று தவெகவில் இணைந்த அவருக்கு இன்று உடனடியாக பரப்புரை செயலாளர் பதவியை வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், கட்சியின் அரசியல் நகர்வுகள் குறித்து புதிய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராகவும், சிறந்த மேடை பேச்சாளராகவும் திகழும் நாஞ்சில் சம்பத் மக்களுக்கான அரசியலில் தவெகவுடன் பயணிக்க இருப்பதில் மகிழ்ச்சி என விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உடன் இணைந்து கழகத்தின் பரப்புரை பணிகளை அவர் முன்னெடுப்பார் என்றும், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெகவில் முக்கிய அரசியல்வாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து வரும் நிலையில், நாஞ்சில் சம்பத்தின் வருகை கட்சிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. திமுக, மதிமுக, அதிமுக, அமமுக என பல்வேறு கட்சிகளில் அரசியல் அனுபவம் பெற்றுள்ள நாஞ்சில் சம்பத், கடந்த சில ஆண்டுகளாக மேடை பேச்சாளராக அடையாளம் காணப்பட்டு வந்தார். இந்நிலையில், அவரது அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயமாக தமிழக வெற்றிக் கழகம் அமைந்துள்ளதுடன், விஜய் அரசியலில் தீவிரமாக களமிறங்கும் சிக்னலாகவும் இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
