இன்று நெப்போலியன் மகன் திருமணம்... ஜப்பானில் குவிந்த நடிகர், நடிகைகள்!

 
நெப்போலியன்
ஜப்பானில் இன்று நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் நடைபெற உள்ள நிலையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் திருமணத்தில் கலந்துக் கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ளனர். இந்நிலையில் நடிகர் நெப்போலியன் மகன் தனுஷூம், அவரது வருங்கால மனைவி அக்‌ஷயாவும் நேரம் செலவழிக்கும் வீடியோ போட்டோஷூட் வெளியாகி வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

A post shared by ஜீவன் யாவும் ஒன்றே (@jeevanontree)

முன்னாள் எம்.பி.யும் தமிழ் திரைப்பட நடிகருமான நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் - அக்‌ஷயா திருமணம் நாளை ஜப்பானில் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்திற்காக ஒரு மாத கப்பல் பயணத்தை மேற்கொண்டிருந்தனர் நெப்போலியன் குடும்பத்தினர். ஜப்பானைச் சென்றடைந்துள்ள நெப்போலியன் குடும்பத்தினர் திருமணத்திற்கான வேலைகளை ஈடுபட்டுள்ளனர். 

தமிழ் திரையுலகில் இருந்து நெப்போலியன் மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர்கள் சரத்குமார், ராதிகா, மீனா, கலா மாஸ்டர், குஷ்பு என திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஜப்பான் சென்றிருப்பதாக தெரிகிறது. 

நெப்போலியன்

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பான ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், அக்‌ஷயாவுடன் தனுஷ் எடுத்திருக்கும் வீடியோஷூட் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. பிங்க் நிற உடையில் இருவரும் பேசி சிரித்துக் கொள்ளும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு தாயின் அன்பு அக்‌ஷயாவிடம் தெரிவதாகவும், பலரும் அக்‌ஷயாவுக்கு ஆதரவாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web