Naruto அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமானார்!
ஜப்பானிய அனிமேஷன் துறையில் பிரபலமானவர் ஷிகேகி அவாய். இவர் ஷிகேனோரி அவாய் என அழைக்கப்படுகிறார். 1980களில் இருந்து அனிமேஷன் துறையில் பிரபலமான நபராக இருந்து வந்தார். இவர் ஒன் பீஸ், நருடோ, டிடெக்டிவ் கோனன், ஃபுட் வார், ஒன் பன்ஜ் மேன் உட்பட பல பிரபலமான அனிம்களை இயக்கியுள்ளார்.

மிகக் குறிப்பாக இவர் இயக்கியவற்றில் ஒன் பீஸ், நருடோ அனிம்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் மூழ்கியிருந்தனர். இவர் அனிமேஷன் துறையில் சுமார் 200க்கும் அதிகமாக அத்தியாயங்களை இயக்கினார். மேலும், சுமார் 400-500 அத்தியாயங்களின் முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில், பிரபல அனிமேட்டர் ஷிகேகி அவாய் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. இவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்த சரியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஷிகேகியின் இறப்பு செய்தி அனிமேஷன் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷிகேகியின் நண்பர்கள், சக இயக்குநர்கள் என பலரும் இவரின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
