நிலவின் மறுபக்கத்திலிருந்து பூமியின் அழகு... வரலாற்றுச் சாதனை படைத்த நாசா!

 
நாசா நாசா

வாஷிங்டன்: நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசாவின் லட்சியத் திட்டமான 'ஆர்டெமிஸ்' (Artemis) தொடரின் ஒரு பகுதியாக, ஆர்டெமிஸ்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலவை நோக்கிச் செலுத்தப்பட்டுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு விண்வெளி வீரர் உட்பட மொத்தம் 4 பேர் அடங்கிய இந்தக் குழுவினர், விண்வெளியில் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தைத் தொடங்கியுள்ளனர். சுமார் ரூ. 8.64 லட்சம் கோடி மதிப்பிலான இந்த பிரம்மாண்டத் திட்டம், விண்வெளி ஆய்வில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

பூமியை ஒரு நாள் முழுவதும் சுற்றி வந்து விண்கலத்தின் உயிர் காக்கும் வசதிகளை  உறுதி செய்த பிறகு, 'டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன்'   எனப்படும் எஞ்சின் எரிப்பு முறை மூலம் விண்கலம் நிலவின் பாதையில் திருப்பப்பட்டது. இந்தப் பயணத்தின் மிக முக்கியச் சிறப்பம்சம் என்னவென்றால், நிலவின் மறுபக்கத்தை  மிக நெருக்கமாகவும், நேரடியாகவும் காணும் முதல் மனிதர்கள் என்ற பெருமையை இந்த நான்கு விண்வெளி வீரர்களும் பெற உள்ளனர்.

இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வரும் 2028-ம் ஆண்டில் மனிதர்களை நிலவில் தரையிறக்கும் 'ஆர்டெமிஸ்-4' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையே, விண்வெளி வீரர்கள் பூமியைப் பிரிந்து நிலவை நோக்கிச் செல்லும்போது, விண்வெளியில் இருந்து பிரகாசமான நீல நிறத்தில் காட்சியளிக்கும் பூமியின் அழகைப் புகைப்படம் எடுத்துள்ளனர். நாசா வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதுடன், உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!