நிலவின் மறுபக்கம்... ஆர்மிடெஸ் 2 விண்கலம் சாதனை!

 
நிலவின் மறுபக்கம் நிலவின் மறுபக்கம்

 


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் தனது லட்சியக் கனவான ‘ஆர்டெமிஸ்’ (Artemis) திட்டத்தில் ஒரு பிரம்மாண்டமான மைல்கல்லை எட்டியுள்ளது. பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு, நான்கு விண்வெளி வீரர்களுடன் புறப்பட்ட ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம், தற்போது நிலவின் மிக அருகே சென்றடைந்துள்ளது. கனடா நாட்டு விண்வெளி வீரர் உட்பட நான்கு வீரர்கள் அடங்கிய இந்தக் குழுவினர், பூமியை ஒரு நாள் முழுவதும் சுற்றி வந்து விண்கலத்தின் உயிர் காக்கும் வசதிகளைத் துல்லியமாகச் சோதித்தனர். அதனைத் தொடர்ந்து, 'டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன்' (Translunar Injection) எனும் அதிநவீன என்ஜின் எரிப்பு தொழில்நுட்பம் மூலம் நிலவை நோக்கிச் சீறிப் பாய்ந்தனர். இந்த வரலாற்றுப் பயணம் நிலவின் மர்மங்கள் நிறைந்த மறுபக்கத்தை மனிதர்கள் நேரடியாகக் காணும் முதல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

The Artemis II astronauts are trained to take lunar photos using a camera and images on screens in front of them.

சுமார் 8.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கீழ், ஓரியன் (Orion) விண்கலம் இன்று இரவு நிலவின் மறுபக்கத்திற்குச் செல்ல உள்ளது. இதுவரை எந்த மனிதக்கண்களும் நேரடியாகக் கண்டிராத நிலவின் அந்தப் பகுதியை இந்த நான்கு வீரர்களும் மிக நெருக்கமாக ஆய்வு செய்ய உள்ளனர். இன்று காலை நிலவரப்படி, நிலவின் வட்டப்பாதையை விண்கலம் வெற்றிகரமாக நெருங்கியுள்ளதால், விண்வெளி வீரர்கள் நிலவின் தரைப்பகுதியில் ஒளிந்துள்ள ரகசியங்களை ஆராயத் தயாராகி வருகின்றனர். நிலவின் பள்ளங்கள், பாறைகளின் தன்மை மற்றும் அங்குள்ள கனிம வளங்கள் குறித்து இந்த ஆய்வு மிக முக்கியமான தரவுகளை வழங்கும் என்று விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

A computer model of Orientale basin on Earth’s moon showing the terrain and density of the surface.

இந்த ‘ஆர்டெமிஸ்-2’ பயணமானது, வரும் 2028-ம் ஆண்டில் மனிதர்கள் நிலவில் மீண்டும் தரையிறங்கும் ‘ஆர்டெமிஸ்-4’ திட்டத்திற்கு ஒரு முன்னோட்டமாக அமையும். கடந்த 2-ம் தேதி புளோரிடாவில் இருந்து விண்ணில் பாய்ந்த இந்த விண்கலம், இன்று தனது பயணத்தின் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. அரை நூற்றாண்டுக்குப் பிறகு நிலவுப் பயணத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி முன்னேற்றம், மனிதகுலம் விண்வெளியில் அடுத்த கட்டத்திற்கு நகரப் போவதற்கான அறிகுறியாகும். நிலவின் மறுபக்கத்தை மனிதர்கள் தரிசிக்கும் அந்த வரலாற்றுத் தருணத்தைக் காண ஒட்டுமொத்த உலகமே மூச்சடைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!