406,771 கி.மீ கடந்து நிலவை சுத்தி வந்தாச்சு .. நாளை பூமிக்குத் திரும்பும் விண்வெளி வீரர்கள்... நாசா சாதனை!

 
நாசா நாசா

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 'ஆர்டெமிஸ்-2' திட்டத்தின் மூலம் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் மாபெரும் முயற்சியில் ஒரு பிரம்மாண்ட வெற்றியை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி, ஒரியன் விண்கலம் மூலம் ஒரு பெண் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி வைத்தது நாசா. இவர்கள் நிலவைச் சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டதுடன், சுமார் 406,771 கி.மீ தொலைவு வரை பயணித்து நிலவுக்கு மிக அருகில் சென்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, நிலவின் மர்மமான பின்புறத்தை நேரில் பார்த்த மனிதர்கள் என்கிற பெருமையையும் இவர்கள் தட்டிச் சென்றுள்ளனர்.

நிலவைச் சுற்றியுள்ள தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட இந்த நான்கு வீரர்களும், தற்போது ஒரியன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் பயணிக்கும் விண்கலம் நாளை அதிகாலை பூமியை வந்தடையும் என நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய நேரப்படி நாளை (ஏப். 11) காலை 5.37 மணி அளவில், அமெரிக்காவின் சான் டியாகோ கடற்கரை அருகே உள்ள பசிபிக் பெருங்கடலில் இந்த விண்கலம் பாராசூட்டுகள் மூலம் மென்மையாகத் தரையிறங்க உள்ளது.

விண்வெளி வீரர்களைப் பத்திரமாக மீட்பதற்காக அமெரிக்கக் கடற்படையினர் மற்றும் நாசா மீட்புக் குழுவினர் பசிபிக் கடல் பகுதியில் இப்போதே தயார் நிலையில் முகாமிட்டுள்ளனர். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுப் பயணத்தில் மனிதர்கள் ஈடுபடுவதால், இந்த விண்கலம் தரையிறங்கும் காட்சியை நேரலையில் காண உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது. வெற்றிகரமாகத் தரைதட்டும் பட்சத்தில், மனிதர்களை மீண்டும் நிலவில் தரையிறக்கும் அடுத்தக்கட்ட 'ஆர்டெமிஸ்-3' திட்டத்திற்கு இது அஸ்திவாரமாக அமையும் என விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்