தனித்து விடப்பட்ட சீமான்...தங்களின் செயல்கள், மன வேதனையைத் தருகிறது...நாதக கொள்கை பரப்பு செயலாளர் தமிழரசன் திடீர் விலகல்.!

 
தமிழரசன்


 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளில் சிலர்  சமீப காலமாக  அதிருப்தி தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  அந்த வகையில், இன்று நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அம்பத்தூர் கோ. தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் ஆரம்பம் முதல் நாம் தமிழர் கட்சியுடைய மாநில கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர்.

சீமான்


இது குறித்து  தமிழரசன் ”  பிரபாகரனிசத்தை சிதைத்து, சீமானிசத்தை விதைத்து கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எங்கள் குலதெய்வம் தங்கை காளியம்மாள் என்று கூறிய நீங்கள், “பிசுறு” என்று பேசியதையும், தலைவருக்கு நிகராக நாங்கள் மதித்து வந்த பொட்டு அம்மான் அவர்களை “மசுரு” என்று பேசி வந்த குரல் பதிவையும், இன்றளவிலும் என்னால், ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மேடையில் உங்களுக்கு முன்னால், சாதிப் பெருமை பேசுகிறவர்களை, இப்படி பேசாதே என்று கண்டிக்காமல், சிறிதும் பொறுப்புணர்வற்று கைக்கொட்டி சிரித்து, சாதி வெறியைத் தூண்டுவதை ஆமோதிக்கின்றீர்கள், தமிழ்த் தேசிய விடுதலையில் சாதி ஒழிப்பு அவசியம் எனும் போது, மேற்கண்ட தங்களின் செயல்கள், மன வேதனையைத் தருகிறது.

சீமான்
எனது இத்தனை ஆண்டுகால தமிழ்த்தேசிய அனுபவமும், கடந்து வந்த பாதைகளும், அனைத்து மக்களுக்கான அரசியலை நோக்கி, உங்கள் தலைமை ஏற்றுக் கொண்டு இனிமேல் என்னால் தொடர முடியாது என்பதை உணர வைத்திருக்கிறது. மண்ணுக்கான மக்களுக்கான, மக்களாட்சி தத்துவத்திற்கான அரசியலை நோக்கி, எனது பயணம் தொடரும்.
எனவே, தற்போது நாம் தமிழர் கட்சியில் வகித்து வரும், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும், விலகுகிறேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” என  குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?