சூப்பர்... தேசிய மகளிா் பவா்லிஃப்டிங் நடுவராக தமிழகத்தின் முதல் பெண் ஆரதி அருண்!

தமிழகத்தின் ஆரதி அருண் முதல் தேசிய மகளிா் பவா்லிஃப்டிங் நடுவராக அங்கீகாரம் பெற்றுள்ளாா். மாநிலத்திலிருந்து 'கேட்டகிரி 1' நிலையிலான ஒரே நடுவராகவும் அவா் நியமிக்கப்பட்டுள்ளார் .இந்த அங்கீகாரத்தை, சா்வதேச பவா்லிஃப்டிங் சம்மேளனத்தின் அங்கமாக இருக்கும் இந்திய பவா்லிஃப்டிங் சம்மேளனம் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீராங்கனையாக களம் கண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய பவா்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் இந்தியாவுக்காகத் தங்கம் வென்றிருக்கும் ஆரதி அருண், தேசிய சாம்பியன்ஷிப்பிலும் பலமுறை வாகை சூடியிருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தேசிய மகளிா் பவா்லிஃப்டிங் நடுவராக அங்கீகாரம் பெற்றது குறித்து 'ஒரு வீராங்கனையாக மட்டுமல்லாமல், தற்போது நடுவராகவும் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்பதை கௌரவமாக கருதுகிறேன்’ .மிகுந்த பொறுப்பான இந்த நடுவா் பணியின் மூலமாக, வலுமிக்க இதுபோன்ற விளையாட்டுகளிலும் பெண்கள் நடுவராகவும், அதிகாரிகளாகவும் வருவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!