டிக்கெட் பரிசோதகர் ரயில் இருந்து தள்ளியதால் கடற்படை அதிகாரி மனைவி பலி!

 
ஆர்த்தி
 

உத்தரப் பிரதேசம் எடாவாவில் இந்திய கடற்படை தலைமை பெட்டி அதிகாரியின் மனைவி ஆர்த்தி ரயிலில் இருந்து தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறுதலாக தவறான ரயிலில் ஏறிய அவரை, டிக்கெட் பரிசோதகர் சமானங்களுடன் கீழேத் தள்ளியதாக சம்பவத்தை கண்டவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். பின்னர் ஏறிய இடத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் ஆர்த்தியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

 

இந்தசம்பவம் தொடர்பாக டிக்கெட் பரிசோதகர் மீது ‘கொலை அல்லாத மனித கொலை’ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரயில்வே போலீசார் விசாரணை தீவிரமாக நடத்தி வருவதுடன், சிசிடிவி காட்சிகள், பயணிகளின் வாக்குமூலங்களும் சேகரிக்கப்படுகின்றன. “நியாயம் காக்கப்படும், உண்மை முழுமையாக வெளிவரும்” என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிய தவறே ஒரு உயிரை பறித்திருக்கிறது என்பதில் கவலை அதிகரித்துள்ளது. பொது சேவைப் பணிகளில் மனிதாபிமானமும் பொறுப்புணர்வும் மிக முக்கியம் என்பதையும் இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது. இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாத வகையில் ரயில்வே ஊழியர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி அளிக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!