தலைவன் உட்பட 20 நக்சலைட்டுகள் ஆயுதங்களுடன் சரண்!
ஐதராபாத் டிஜிபி அலுவலகத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் தேவா உள்பட 20 பேர் ஒரே நேரத்தில் சரணடைந்தனர். சரணடையும் போது, 48 அதிநவீன ஆயுதங்களையும் ரூ.20 லட்சம் ரொக்கத்தையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாவோயிஸ்ட் இயக்கத்தை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ள நிலையில், இந்த சரணடைப்பு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சரணடைந்தவர்களில், மக்கள் விடுதலை கெரில்லா இயக்கத்தின் தலைவரான தேவா, தெலங்கானா மாநிலக்குழு உறுப்பினர் கன்கனாலா ராஜிரெட்டி, அவரது மனைவி ஈஸ்வரி உள்ளிட்டோர் உள்ளனர். சமீபத்தில் மாவோயிஸ்ட் தலைவர் ஹிட்மா உயிரிழந்த பிறகு, அந்தப் பொறுப்பை தேவா ஏற்றிருந்தார். 2003ஆம் ஆண்டு இயக்கத்தில் சேர்ந்த தேவா, நூற்றுக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தயாரிப்பு இயந்திரத் துப்பாக்கிகள், ஏகே-47 ரைபிள்கள், இன்சாஸ் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை அடங்கும். தேவா சரணடைந்ததன் மூலம் மாவோயிஸ்ட் இயக்கத்தில் தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாக டிஜிபி தெரிவித்தார். இந்த நிகழ்வு, மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
