போலீஸ் இன்பார்மர்கள் 2 பேரை நக்சல்கள் சுட்டுக் கொலை... பரபரப்பு!

 
நக்சல்

சத்தீஷ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில்  தோட்மா கிராமத்தில் வசித்து வரும் இளைஞர்கள் பமான் காஷ்யப்(29) மற்றும் அனீஸ் ராம் போயம்(38).

தீவிரவாதிகள் சுட்டு கொலை

இவர்களை போலீஸ் இன்பார்மர்கள் என நினைத்து நக்சல்கள் சுட்டுக் கொலை செய்தனர்.  போலீஸ் இன்பார்மர்களாக செயல்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நக்சல்கள் இந்த கொலையை நிகழ்த்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நக்சல்களால் கொலை செய்யப்பட்ட பமான் காஷ்யப் 2024 அக்டோபரில்  அபுஜ்மாட் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில்  சுமார் 38 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் வகையில்  பமான் காஷ்யப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.  

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை 7 பேரை நக்சல்கள் படுகொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web