NDA கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு ... நயினார் நாகேந்திரன்!

 
நயினார்


 
தமிழக பாஜக தலைவர்  நயினார் நாகேந்திரன் திமுக அரசை வீழ்த்துவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.  இதன் ஒரு பகுதியாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்


இது குறித்து நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ”NDA கூட்டணியில் இணைந்து செயல்பட த.வெ.க தலைவர் விஜய்க்கு முன்னதாகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பிற்கு இனிமேல் தான் பதில் வரும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.  

நயினார் நாகேந்திரன் மோடி


இருப்பினும், நயினார் நாகேந்திரனின் அழைப்புக்கு விஜய் அல்லது தவெகவின் சார்பில் உடனடியாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. மறுபக்கம், விஜய் இதுவரை தனது கட்சி தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணியில் இணையுமா என்பது குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால், திமுகவை எதிர்ப்பது தனது முக்கிய இலக்கு எனக்   கூறியுள்ளார் நேற்றைய தினம் கூட, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி இருப்பதாக நயினார் நாகேந்திரன் உறுதிப்பட தெரிவித்திருந்தார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது