இந்த வருஷம் முருகர்... அடுத்த வருஷம் தமிழகம்... நயினார் நாகேந்திரன் அதிரடி!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர் சந்திப்பில் “விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எப்போதும் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டதே இல்லை. முருகன் மாநாடு என்பது பக்தர்களுக்காக நடத்தப்படும் மாநாடு.அரசியல் மாநாடு கிடையாது .
இந்த மாநாட்டில் உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொள்கின்றனர். மேடையில் தலைவர்கள் அனைவரும் இருந்தாலும் அரசியல் கருத்துகள் இருக்காது. இது முருக பக்தர்களுக்கான மாநாடு என்பதால் முருக பக்தர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் கலந்து கொள்ளலாம். மேலும் நாங்கள் இப்போது முருகரை கையில் எடுத்துள்ள நிலையில் 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம் எனக் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!