பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பாலியல் கரங்கள்... திமுக ஆட்சியில் அவலம்... நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

 
நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்
 

 

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத் தர்காவில், புனித நீர் தெளிக்க குழந்தையுடன் வந்த பெண்ணை அப்துல் அஜீஸ் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, கத்தியால் குத்தியதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய பெண்மணிக்கு சீக்கிரமே நலம் கிட்ட வேண்டுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நயினார் ஸ்டாலின்

பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பெண்கள் பாதுகாப்பின்றி உள்ள நிலையில், திமுக அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டம் ஒழுங்கை குற்றவாளிகள் மதிக்கவில்லை என்பதே இந்தச் சம்பவம் காட்டுவதாக நாகேந்திரன் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ள அப்துல் அஜீஸ் எவ்வாறு தர்கா அஸ்ரத் ஆக நியமிக்கப்பட்டார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

தென்மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்...  நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!  

மாவட்டத்தையே பதற்றத்தில் ஆழ்த்திய இச்சம்பவப் பற்றி திமுகவில் பேசப்படும் பெண் போராளிகள் அமைதியாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், மத வாக்கு வங்கி கணக்கில் திமுக மௌனமா என்ற சந்தேகத்தையும் முன்வைத்துள்ளார். எந்த சமரசமும் இன்றி குற்றவாளிக்கு கடும் தண்டனை அளித்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!