NCERT பாடப்புத்தக சர்ச்சை... உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மன்னிப்பு!

 
ncert

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்ட 8ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம் பெற்ற கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முன் மத்திய அரசு மன்னிப்பு கோரியது. அரசின் சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, ஆட்சேபனைக்குரிய பகுதிகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். தொடர்புடைய நபர்கள் இனி எந்த அமைச்சக பணியிலும் ஈடுபட மாட்டார்கள் எனவும் கூறினார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடும் கருத்து தெரிவித்தார். நீதித்துறையின் கண்ணியத்தை அவமதிக்க அனுமதி இல்லை என்றார். புத்தகத்தின் அனைத்து நகல்களையும் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். டிஜிட்டல் வடிவில் பரவி வரும் பிரதிகளையும் நீக்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், புத்தகத்தின் PDF பதிப்பு பரவலாக உள்ளதாக சுட்டிக்காட்டினார். நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆன்லைன் தளங்களில் இருந்து உடனடி நீக்கம் அவசியம் என்றார். பாடத்தில் வழக்குகள் நிலுவை மற்றும் நீதித்துறையில் உள்ள சவால்கள் குறித்து குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!