NCHM JEE 2026 நுழைவு தேர்வு... விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

 
nhmct

தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் இயங்கும் 78 கல்வி மையங்களில் பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இதில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான என்சிஎச்எம் ஜேஇஇ தேர்ச்சி அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

jee

2026-27ம் கல்வியாண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத் தேர்வு கணினி வழியில் வரும் ஏப்ரல் 25-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் ஜனவரி 25-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய பின்னர் கால அவகாசம் வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை என்டிஏ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்கள் இருப்பின் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!