8ம் வகுப்பு புத்தக சர்ச்சை... என்சிஇஆர்டி நிபந்தனையற்ற மன்னிப்பு!
8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பகுதி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. அந்த பாடத்தில் நீதித்துறை குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றதாக பல தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.

இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணையின் போது அந்தப் பாடப் பகுதி குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இது நீதித்துறைக்கு எதிரானதாகவும் திட்டமிட்டு சேர்க்கப்பட்டதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அந்தப் புத்தகத்தை மேலும் பதிப்பதற்கும் வெளியிடுவதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து என்சிஇஆர்டி நிர்வாகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அந்தப் புத்தகம் திரும்பப் பெறப்படும் என்றும் இனி விற்பனைக்கு விடப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
