234 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்...நயினார் நாகேந்திரன் பேட்டி

தமிழகத்தில் 234 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுகவிற்கு நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய எதிர்ப்பலை கிளம்பியுள்ளது.
தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் கூறுகின்றனர். தொகுதி மறு சீரமைப்பு குறித்து பிரதமரோ, உள்துறை அமைச்சரோ ஏதாவது தெரிவித்தாரா? இவர்கள் திரும்பத் திரும்ப இதே கருத்தை வலியுறுத்தியதால் மத்திய அமைச்சர் அமித்ஷா விகிதாச்சார அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் இதனால் தமிழகத்தில் பாதிப்பு இருக்காது” என்று தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடி பேசியது அநாகரிகமான செயல். திமுக அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர். பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கின்றனர். யார் இந்த தகுதி வாய்ந்த குடும்ப பெண்கள்? மின்சார கட்டணம் 300 மடங்கு உயர்ந்துள்ளது. சொத்து வரி உயர்ந்துள்ளது. பால் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது. மக்கள் மனநிலை மாறியுள்ளது தமிழகத்தில் 234 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!