ரெட், ஆரஞ்ச் அலெர்ட் மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

 
ரெட்
கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால்  மே 25 மற்றும் 26ம் தேதிகளில் கோவை, நீலகிரி  மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

பொதுமக்களே உஷார்...  இந்த மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட்... !
இந்நிலையில், ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எதிரொலி காரணமாக  முன்னேற்பாடுகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் பேரிடர் மேலாண்மை துறை ஆலோசனை நடத்தியது.மிக முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளும் கோவை, மற்றும் நீலகிரிக்கு விரைந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?