நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

 
நீரஜ் சோப்ரா


இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் நேற்று ஜூன் 20ம் தேதி  பாரிசில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் முதல் சுற்றில் 88.16 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரான நீரஜ், ஜெர்மனியின் ஜூலியன் வெபரை (87.88 மீட்டர்) வீழ்த்தி, இந்த சீசனில் முதல் முறையாக அவரை முந்தியுள்ளார்.  பிரேசிலின் லூயிஸ் மாரிசியோ டா சில்வா 86.62 மீட்டர் எறிந்து 3 ம் இடத்தைப் பிடித்தார், இது தென் அமெரிக்க சாதனையாகும்.

நீரஜ் சோப்ரா

நீரஜ் தனது முதல் முயற்சியிலேயே 88.16 மீட்டர் எறிந்து முன்னிலை பெற்று சாதனை படைத்தார்.  . வெபர் 87.88 மீட்டர் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார், மற்றும் டிரினிடாட் & டொபாகோவின் கேஷார்ன் வால்காட் 80.94 மீட்டருடன் 3ம் இடத்தில் இருந்தார். நீரஜின் இரண்டாவது எறிதல் 85.10 மீட்டராக இருந்தது,.  

நீரஜ் சோப்ரா
8 பேர் கொண்ட இந்தப் போட்டியில், நீரஜ், வெபர், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், கென்யாவின் ஜூலியஸ் யேகோ, மற்றும் வால்காட் ஆகியோர் 90 மீட்டர் கிளப்பில் உள்ளவர்கள். ஆனால், பீட்டர்ஸ் (80.29 மீட்டர்) மற்றும் வால்காட் (81.66 மீட்டர்) ஆகியோர் 82 மீட்டரைத் தாண்டவில்லை. இது நீரஜின் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் டைமண்ட் லீக் பட்டமாகும்  . இவர் 2017 இல் ஜூனியர் உலக சாம்பியனாக பாரிஸ் டைமண்ட் லீக்கில் 84.67 மீட்டர் எறிந்து 5 ம் இடம் பிடித்திருந்தார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது முதல் பாரிஸ் வெற்றியாக கருதப்படுகிறது.   

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது