இளநிலை நீட் தேர்வு முடிவு வெளியீடு!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நீட்-யூஜி 2025' தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 மையங்களில் சுமார் 22.7 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பு தேசிய தேர்வு முகமையால் ஜூன் 3ம் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்கள் இந்த விடைக்குறிப்பின் மீது தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 5ம் தேதி முடிவடைந்தது.
மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு (பைனல் ஆன்ஷர் கீ) தயாரிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும். இந்நிலையில், இன்று நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, 'NEET UG 2025 Result' என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். வெளியாகும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால், தேர்வு முடிவு பிடிஎப் வடிவில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!