நீட் தேர்வு முடிவுகள்... தமிழ்நாட்டில் 76,181 மாணவர்கள் தேர்ச்சி!

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்-யூஜி 2025' தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பு தேசிய தேர்வு முகமை மூலம் ஜூன் 3ம் தேதி வெளியிடப்பட்டது. நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 22,09,318 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 12,36,531 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை, 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் 76,181 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!