நீட் தேர்வு முடிவுகள்.. முதலிடத்தை பிடித்த உத்தரப்பிரதேசம்.. தமிழ்நாடு 6 வது இடம்!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 22.7 லட்சம் மாணவர்கள் 557 மையங்களில் 13 மொழிகளில் எழுதினர். இன்று முடிவுகள் வெளியான நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தியாவில் 1.70 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 76,181 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர்.
தேர்வு எழுதிய 22 லட்சம் பேரில் 7.22 லட்சம் மாணவிகளும், 5.14 லட்சம் மாணவர்களும் மூன்றாம் பாலினத்தவர்களில் 6 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பாண்டிலும் மாணவிகளே அதிகளவில் தேர்வு பெற்றிருக்கிறார்கள்.சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை பொறுத்தவரை வட இந்தியாவை விடவும் தென்னிந்திய மாநிலங்களில் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக இருக்கும்.
ஆனால் நீட் தேர்வு முடிவுகளில் தென்னிந்திய மாநிலங்களை விடவும் வட இந்திய மாநிலங்களே முன்னணியில் இருக்கிறது. அதன்படி உத்தரப்பிரதேச மாநில அதிக தேர்ச்சியுடன் முதலிடத்தில் இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 170684 மாணவர்களும், மகாராஷ்டிராவில் 125727 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்பின் 3வது இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் 119865 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4 வது இடத்தில் கர்நாடகா 83582 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 80954 மாணவர்களுடன் பீகார் 5 வது இடத்திலும், 76181 மாணவர்களுடன் தமிழ்நாடு 5 வது இடத்தையும் பிடித்துள்ளது. 73328 மாணவர்களின் தேர்ச்சியுடன் கேரளா 7வது இடத்தில் இருக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!