மே 3-ல் நீட் தேர்வு... இன்று முதல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்!
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 3ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க மார்ச் 8 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://neet.nta.nic.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் அல்லது 011 40759000 என்ற எண்ணில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். உயிரியல் பாடத்திற்கு 360 மதிப்பெண்களும், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கு தலா 180 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு பாடத்திட்டம் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
