இந்தியா முழுவதும் 499 மையங்களில் 13 மொழிகளில் நீட் தேர்வுகள்!! உங்க செண்டரை செக் பண்ணிக்கோங்க!!

 
நீட் நுழைவுத்  தேர்வு

இந்தியாவில் மருத்துவ படிப்புக்களை படிக்க நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியம். இந்த தேர்வுகள் தேசிய தேர்வு முகமை மூலம் இந்தியா முழுவதும் ஒரே நாளில்நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை, முதுநிலை ஒவ்வொரு கட்டத்திலும் தனித்தனியாக தேர்வுகளை எழுத வேண்டியது அவசியம். அந்த வகையில் நடப்பாண்டில் நீட் தேர்வுகள் மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் தயாராகி வரும் நிலையில் தேர்வு மையங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் தேர்வு

இந்தியா முழுவதும் மே7ம் தேதி  இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுகள்  நடைபெற உள்ளது. இந்நிலையில்  நீட் தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்காக  499 நகரங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு
அத்துடன் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களையும் தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள், மாணவர்கள் அதை பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் NTA NEET அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.neet.nta.nic.in அல்லது www.nta.ac.in ல் தேர்வு மைய தகவலை தெரிந்துக் கொள்ளலாம் .நீட் தேர்வு மே 7 ஆம் தேதி மதியம் 2:00 முதல் 5:20 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது என  13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web