இன்று மாலை 5 மணியுடன் நிறைவு... NEET PG மூன்றாம் கட்டக் கலந்தாய்வு!

 
neet pg
 


தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான (PG Degree/Diploma) 2025-26 கல்வி ஆண்டுக்கான மூன்றாம் கட்டக் கலந்தாய்வு (Round III) தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

NEET UG Counselling 2021

புதிய பதிவுகள் மற்றும் கலந்தாய்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று பிப்ரவரி 11ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.விருப்பமான இடங்களைத் தேர்வு செய்வதற்கான (Choice Filling & Locking) அவகாசமும் இன்று மாலை 5:00 மணி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றில் பங்கேற்கும் மாணவர்களுக்கான தற்காலிகத் தரவரிசைப் பட்டியல் மற்றும் இட ஒதுக்கீடு முடிவுகள் பிப்ரவரி 13-ஆம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnmedicalselection.org மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.முந்தைய சுற்றுகளில் இடம் கிடைக்காதவர்கள் அல்லது இடத்தைப் பெற்று அதில் சேராதவர்கள் இந்த மூன்றாம் கட்டத்தில் தகுதியின் அடிப்படையில் பங்கேற்கலாம். இந்தச் சுற்றில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டால், அவர்கள் கட்டாயம் அந்த இடத்தைப் பெற வேண்டும் என்பது விதிமுறை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!