பயங்கரம்: கட்டிடத் தொழிலாளி வெட்டிப் படுகொலை... நெல்லையில் பரபரப்பு!
நெல்லை பேட்டை பகுதியில் நள்ளிரவில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தென்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்டை சேரன்மகாதேவி ரோடு பகுதியைச் சேர்ந்த கருத்தபாண்டியின் மகன் சுரேஷ் (19), நேற்று இரவு கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவரை அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த பேட்டை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார், உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இந்தக் கொலையைச் செய்தது அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மணி (44) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை மற்றும் பாலியல் வன்கொடுமை எனப் பல்வேறு வழக்குகள் உள்ளன. குறிப்பாக, இவர் 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைக்குச் சென்றவர் என்பதும், என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி கிட்டப்பாவின் நெருங்கிய கூட்டாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கஞ்சா வியாபாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதமா என்ற கோணத்தில் போலீசார் 100 சதவீதம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ரவுடி மணியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் காரணமாகப் பேட்டை பகுதியில் பதற்றம் நிலவுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
