இந்திரா காந்தி அமைதி விருது நெல்சன் மண்டேலா மனைவிக்கு!
2025-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது, மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிரகா மச்செல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி ஆவார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை இந்த விருதை வழங்குகிறது. இந்த விருதில் ரூ.1 கோடி பரிசுத்தொகை, பாராட்டுப்பத்திரம் மற்றும் கோப்பை இடம்பெற்றுள்ளன. மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான பணிகளுக்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிரகா மச்செல்லின் வாழ்க்கை முழுவதும் மனித உரிமைகள் பாதுகாப்பும், சமத்துவ சமூக உருவாக்கமும் மையமாக இருந்ததாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. பின்தங்கிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக மொசாம்பிக் அதிபராக இருந்த அவரது முதல் கணவர் சமோரா மச்செல் 1986-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், பின்னர் நெல்சன் மண்டேலாவை கிரகா திருமணம் செய்துகொண்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
