நெல்சன் மண்டேலாவின் மனைவிக்கு 'இந்திரா காந்தி அமைதி விருது' - யார் இந்த கிரகா மச்செல்?!
சர்வதேச அளவில் அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் வகையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை இந்த விருதை வழங்குகிறது. ரூ.1 கோடி ரொக்கப்பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் சிறப்பு நினைவுக்கோப்பை ஆகியவை இதில் அடங்கும்.
பின்தங்கிய சமூகங்களின் முன்னேற்றம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்கள் மற்றும் அனைவருக்கும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க கிரகா மச்செல் ஆற்றிய வாழ்நாள் பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
உலக வரலாற்றிலேயே இரண்டு வெவ்வேறு நாடுகளின் (மொசாம்பிக் மற்றும் தென்னாப்பிரிக்கா) 'முதல் பெண்மணி' (First Lady) என்ற பெருமையைப் பெற்ற ஒரே நபர் நெல்சன் மண்டேலாவின் மனைவியான கிரகா மச்செல்.
மொசாம்பிக் நாட்டின் முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றிய மச்செல், அங்கு எழுத்தறிவின்மையை ஒழிக்கப் பெரும் பங்காற்றினார். இவரது முதல் கணவர் மொசாம்பிக் அதிபர் சமோரா மொயிசஸ் மச்செல். அவர் 1986-ல் மறைந்த பிறகு, 1998-ல் தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற தலைவர் நெல்சன் மண்டேலாவைத் திருமணம் செய்து கொண்டார்.மனிதாபிமானப் பணிகள்: ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் மற்றும் பெண்களின் நலன்களுக்காகத் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
