ப்ளீஸ்... யாரும் எம் பொண்ணைத் தப்பா பேசாதீங்க!” திருமணத்திற்கான உண்மையான காரணம் இது தான்... நெப்போலியன் சம்மந்தி பேட்டி!
ஜப்பானில் நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த திருமணத்தை விமர்சித்திருந்தனர். நெப்போலியன் மகனைப் பார்த்துக் கொள்ள நர்ஸ் தான் தேவை.. மனைவி கிடையாது என்கிற ரீதியில் கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. பணத்திற்காக ஆசைப்பட்டு மகள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டார் என்று மணப்பெண்ணின் பெற்றோர் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் நடிகர் நெப்போலியனின் மருமகளின் பெற்றோர் திருமணம் குறித்து பேட்டியளித்துள்ளனர்.
அதில், “யாரும் எங்களுடைய மகளைப் பற்றி தப்பா பேசாதீங்க” என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.திருநெல்வேலி மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த பெண்ணோடு தான் நடிகர் நெப்போலியன் மகன் தனுஷூக்கு கடந்த நவம்பர் 7ம் தேதி திருமணம் நடைபெற்றது. நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் தசைசிதைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை திருமணம் செய்துக் கொண்ட பெண் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்து மணப்பெண் அட்ஷயாவின் தாயார் கொடுத்திருக்கும் பேட்டியில், “என்னுடைய மூத்த மகளுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. என்னுடைய இரண்டாவது மகளுக்கும் நான் வரன் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் நெப்போலியன் குடும்பத்தில் இருந்து எங்களுக்கு வரன் வந்தது.
எங்களுக்கு நெப்போலியன் மாமனார் குடும்பத்தோடு பல வருட பழக்கம் இருக்கிறது. நெப்போலியனின் மாமனார் வசித்த பகுதியில்தான் நாங்களும் வசித்தோம். அதனால் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே நெப்போலியன் குடும்பத்தை தெரியும்.அவர்கள் எங்களுடைய வீட்டில் வந்து பெண் கேட்டபோது நான் முதலில் தயங்கினேன். ஆனால் என்னுடைய பொண்ணு நெப்போலியன் சார் குடும்பத்தை பற்றி எனக்கு தெரியும். நான் அந்த குடும்பத்தில் திருமணம் செய்வது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது என்றார். அதற்கு பிறகு நாங்கள் எல்லோரும் பேசி முடிவெடுத்து தான் திருமணத்திற்கு சம்மதம் சொன்னோம்.
ஆனால் இப்போது வரையிலும் எங்களைப் பலரும் திட்டிக் கொண்டிருந்தார்கள். பணத்திற்காக மகளை நாங்கள் திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம் என்று பலரும் சொல்கிறார்கள். சமூக வலைதளத்தில் மட்டுமல்லாமல் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட அதையே சொல்வது எங்களை ரொம்பவும் பாதிக்க வைத்தது.
என்னுடைய மகள் நன்றாக வாழ வேண்டும் என்று தான் நாங்கள் அவளுக்கு பிடித்த வாழ்க்கைக்கு சம்மதம் சொன்னோம். கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் நாங்கள் ஊருக்கு கிளம்பி விட்டோம். என்னுடைய மகள் ரொம்பவும் துறுதுறுவென இருப்பவள். மாப்பிள்ளை தனுஷ் என் மகள் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார். அவளை அதிகமாக கேர் செய்து பார்ப்பது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது.அதனால் தயவு செய்து யாரும் என்னுடைய பொண்ணை பற்றி தவறாக பேசாதீர்கள். அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!