பாப் பாடகர் பாலென் ஷா மிக இளம் வயதில் நேபாளத்தின் புதிய பிரதமராகிறார் ... ஜென் ஸீ தலைமுறை அசத்தல்!
நேபாள நாட்டில் 2025ம் ஆண்டு ‘ஜென் ஜி’ இளைஞர்கள் நடத்திய பெரும் போராட்டத்தை நடத்தியதால் அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேபாளத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்தப் பொதுத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரபி லாம்ச்சானே தலைமையிலான ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி (ஆர்எஸ்பி) வரலாற்று வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நேபாளத்தில் மொத்தம் 275 இடங்கள் உள்ள நிலையில், தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 138 இடங்களை அந்த கட்சி எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு நேபாளத்தில் பெரும்பான்மை அரசு அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் காத்மாண்டு மாநகராட்சி மேயராக இருந்த பாப் பாடகர் பாலென் ஷா, ஆர்எஸ்பி கட்சியில் இணைந்து ஜாபா-5 தொகுதியில் போட்டியிட்டு முன்னிலையில் இருந்து வருகிறார்.

இதன் மூலம் நேபாளத்தின் மிக இளைய பிரதமராக பாலென் ஷா பொறுப்பேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இளைஞர்கள் அதிக அளவில் ஆதரவு அளித்ததால் ஆர்எஸ்பி கட்சி 56 முதல் 59 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த தேர்தல் நேபாள அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
