ஈரானின் மதகுரு அயதுல்லா அலி கமேனியைக் கொல்வது தான் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும்... நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கை!

இஸ்ரேல் , ஈரான் இடையேயான போர் உச்சத்தை எட்டியிருக்கிறது. செய்தியாளர் சந்திப்பில், மதகுரு அயத்துல்லா கமேனி கொல்லப்படுவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் தடுத்ததாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேள்வியெழுப்பட்டது. இதற்கு நெதன்யாகு பதில் அளிக்க மறுத்து விட்டார்.மேலும் "எது தேவையோ அது நிறைவேற்றப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மத்திய கிழக்கில் உள்ள அனைவரையும் பயமுறுத்தும் ஈரானால், அரை நூற்றாண்டு காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. சவூதி அரேபியாவில் உள்ள அரம்கோ எண்ணெய் வயல்களில் குண்டுவீசித் தாக்கியுள்ளன. ஈரான் பயங்கரவாதத்தை எல்லா இடங்களிலும் பரப்புகிறது.நாங்கள் எங்கள் எதிரியை மட்டும் எதிர்த்துப் போராடவில்லை.
உங்கள் எதிரியையும் எதிர்த்துப் போராடுகிறோம். ஈரானின் பயங்கரவாதத்தால், உலகம் அணுசக்தி பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளுகிறது. இதைத் தடுத்து முற்றுப்புள்ளி வைக்க இஸ்ரேல் நினைக்கிறது. தீய சக்திகளை எதிர்த்து நிற்பதன் மூலம் மட்டுமே நாம் அதைச் செய்ய முடியும்.இன்று டெல் அவிவ்... நாளை நியூயார்க்... இதைத் தடுக்க வேண்டும். மேலும், ஈரானின் மதகுரு அயதுல்லா அலி கமேனியைக் கொல்வது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும்" எனக் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!