நெட்டிசன்கள் கண்டனம்... 171 செமீ உயரம், அழகாக, ஒல்லியாக, 10 வயது குறைவாக இருக்கிற காதலி வேணும்... நிபந்தனை விதித்த பேராசிரியர்!

சீனாவில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் லூ. இவர் தனக்கு காதலியாக வரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என வித்தியாசமான நிபந்தனைகளை விதித்துள்ளார். இந்த நிபந்தனைகள் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
பேராசிரியரான லூ ஆண்டுக்கு ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். தன்னைவிட 10 வயது குறைவாகவும், ஒல்லியாகவும், அழகாகவும், நல்ல நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 165 சென்டி மீட்டர் முதல் 171 சென்டி மீட்டர் உயரத்தில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீனாவில், முதல் ஒன்பது இடங்களில் தரவரிசைப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என பேராசிரியர் லூ நிபந்தனை விதித்துள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!