ராமேஸ்வரத்தில் புதிய ஏர்போர்ட்... பட்ஜெட்டில் அதிரடி!

 
ராமேஸ்வரம்

 இன்று சட்டசபையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார். ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும்m கருப்பை புற்றுநோய் தடுப்பூசி போட ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும். எரிசக்தித் துறைக்கு ரூ.27,168 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்


அதில் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  குறிப்பாக மகளிருக்கு ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கி தொழில்திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 20 லட்சம் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

பட்ஜெட்

கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விரும்பும் வகையில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். ரூ.10 லட்சம் வரை பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் அசையா சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும். மூன்றாம் பாலினத்தவருக்கு மாதம் ரூ1000 உதவித்தொகை மற்றும் அவர்களும் இனி ஊர்க்காவல் படையில் சேர்க்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web