தமிழகத்திற்கு புதிதாக அம்ரித் பாரத் ரயில்... என்னென்ன வசதிகள் தெரியுமா?! கட்டணம் குறைவு
நடுத்தர மக்களின் அதிவேக ரயிலாக இன்று முதல் அம்ரித் ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த ரயில் சேவை புஷ் புல் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. தமிழக மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் வகையில், மதுரை வழியாகத் தாம்பரத்திற்கு இயக்கப்பட உள்ள இந்த வாராந்திர ரயில் சேவை, தென் மாவட்ட மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையவுள்ளது.
இன்று காலை 10.45 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, அம்ரித் ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

இந்த ரயில் (வண்டி எண்: 06122) திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய ரயில் நிலையங்கள் வழியாகத் தாம்பரம் சென்றடையும்: திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை (மாலை 3.45 மணி), திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் (நள்ளிரவு 12.30 மணி) வந்தடையும்.
ரயிலின் சிறப்பம்சங்கள்: 11 பொதுப் பெட்டிகள் (General Class), 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் (Sleeper Class)., 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிகள்.
இந்த ரயில் 'புஷ்-புல்' தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. அதாவது ரயிலின் முன்னும் பின்னும் எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது ரயில் வேகமாக வேகம் எடுக்கவும் மற்றும் விரைவாக நிற்கவும் உதவும். வந்தே பாரத் ரயில்களைப் போல நவீன வசதிகள் இருந்தாலும், இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கான கட்டணத்தைக் கொண்ட 'குளிர்சாதன வசதி இல்லாத' அதிவேக ரயிலாகும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
