புதிய ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து 4 பேர் படுகாயம்... பூஜை போடுவதற்காக சென்ற போது சோகம்!
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென் கீரனூர் கிராமத்தில் வசித்து வருபவர் மாயகண்ணன். இவர் புதிதாக வாங்கப்பட்ட ஆட்டோ உடன் குடும்பத்தாரை குலதெய்வ கோயிலுக்கு அழைத்துச் செல்லும்போது கள்ளக்குறிச்சி சேலம் சாலை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் குறுக்கே வந்த இரண்டு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதாமல் இருக்க முயன்ற போது ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆட்டோவை அப்புறப்படுத்தி அதில் குடும்பத்தோடு வந்த ஆட்டோ டிரைவர் மற்றும் பெண்கள் உட்பட 4 பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில், 4 பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே கடன் வாங்கி வாங்கிய ஆட்டோ ஒரே வாரத்தில் விபத்தில் சிக்கி சேதமடைந்த சம்பவம் ஆட்டோ ஓட்டுநருக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
