ஹனிமூன் கணவன் கொலைக்கு பின்னர் மேகாலயாவில் புதிய தடை அமலுக்கு வந்தது!

 
 மேகாலயா

மேகாலயாவில் ஹனிமூன் சென்றிருந்த புதுமண தம்பதியரில், இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபரான கணவனை, உடன் ஹனிமூன் சென்ற மனைவியே கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கொலைச் சம்பவத்தை தொடர்ந்து மேகலயாவில் தனியார் வாகனங்களை வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரும் அவரது மனைவி சோனமும் தேனிலவுக்கு மேகாலயா சென்றனர். அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார். சோனம் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரகுவன்சியை கொன்றது தெரிய வந்தது. 

மேகாலயா

ரகுவன்சி கொலைக்கு முன் மேகாலயாவில் ஒரு ஸ்கூட்டி வாடகைக்கு எடுக்கப்பட்டது. பிறகு கைவிடப்பட்ட நிலையில் இது மீட்கப்பட்டது. இந்த ஸ்கூட்டி முறைப்படி பதிவு செய்யப்படாத ஒரு வாகனம் எனத் தெரியவந்தது.

இந்நிலையில் மேகாலயாவில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தனியார் வாகனங்களை வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்தவும் வாடகைக்கு விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களும் இத்தடை பொருத்தும். தடையை மீறினால் அபராதம், வாகனம் பறிமுதல் உள்ளிட்ட கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது