ஆயுத படைகளுக்கு புதிய தலைவர் நியமனம்... உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கறார்!

 
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது.  உக்ரைன் ஆயுத படைகளின் புதிய தலைவராக ஆண்ட்ரி நேட்டோவ் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிராக நடந்த இந்த போரில், அந்நாட்டின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உட்பட  பல நகரங்களை ரஷியா தொடக்கத்தில் கைப்பற்றியது. 

உக்ரைன் போர்

எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. உக்ரைன் ரஷியா போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி   நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. இதற்கேற்ப, அந்நாடுகள் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.  போர் தொடங்கிய பின்பு, உக்ரைனில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் ஆயுத படைகளின் புதிய தலைவராக ஆண்ட்ரி நேட்டோவ் என்பவரை அதிபர் ஜெலன்ஸ்கி நியமனம் செய்து உள்ளார். உக்ரைனின் அனாடலி பார்ஹைலெவிச் என்பவர்  2024ம் ஆண்டு பிப்ரவரி முதல் இந்த பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் போர் திறனை மேம்படுத்தும் வகையில், ஆயுத படைகளை நாங்கள் திட்டமிட்ட முறையில் உருமாற்றியுள்ளோம் என அதுகுறித்து  பாதுகாப்பு அமைச்சர்   ருஸ்டெம் உமரோவ் கூறியுள்ளார். 

ரஷ்யா உக்ரைன்

எனினும், அவர் குழுவில் ஒருவராக தொடர்ந்து நீடிப்பார் என உமரோவ் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால், உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஐ.ஜி.யாக பார்ஹைலெவிச் இனி செயல்படுவார். ராணுவத்தின் நிலைப்பாடுகளை ஒட்டுமொத்த அளவில் மேற்பார்வை செய்வதுடன், ராணுவ ஒழுக்கம் வலுப்படும் வகையிலான பணிகளையும் அவர் கவனிப்பார் என உமரோவ் கூறியுள்ளார். இதேபோன்று, ஆயுத படைகளின் தளபதியாக, அலெக்சாண்டர் சிர்ஸ்கை தொடர்ந்து பதவி வகிப்பார். ரஷியா முழு அளவில் படையெடுப்பை தொடங்கிய 2022ம் ஆண்டு முதல், அதிபர் ஜெலன்ஸ்கி, அரசு மற்றும் ராணுவத்தில் அடிக்கடி அதிகாரிகள் மட்டத்தில் மாற்றங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?