ரேஷன்கார்டுதாரர்களுக்கு புதிய நிபந்தனைகள்!! மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!!

 
ரேஷன் விரல் பதிவு கைரேகை

இந்தியா முழுவதும் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.தகுதியில்லாத பலர் இலவச ரேஷன் பொருட்களை பெறுவதாகவும், தகுதியற்ற பலருக்கு இந்த வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை எனவும் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ரேஷனில் இலவச பொருட்கள் பெறும் ரேஷன் கார்டுதாரர்கள், அதற்கான புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என  அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய நிபந்தனைகளின் படி இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

ரேஷன்

ஒவ்வொரு மாநிலத்திலும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உட்பட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மலிவு விலையிலும் இலவசமாகவும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அரசு திட்டங்களின் பலன்கள் தகுதியானவர்களை சென்றடைய வேண்டும். இதன் ஒரு பகுதியாக தகுதியில்லாதவர்கள் ரேஷன் கார்டுகளை உடனடியாக ஒப்படைக்க அதிகாரிகள் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் தகுதிக்கான நிபந்தனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் தகுதியற்றவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில்  பச்சை ரேஷன் கார்டுகளில் ஏராளமானோர் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.  

ரேஷன்

புதிய மாற்றங்களின்படி, இந்த பலன்களை பெற ஒருவருக்கு 100 சதுர மீட்டருக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது. குடும்பத்தில் யாருக்கும் அரசாங்க வேலை இருக்கக்கூடாது. பிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம் அல்லது டிராக்டர் இருந்தாலோ, குடும்ப வருமானம் கிராமத்தில் 2 லட்சத்துக்கும், நகரத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  இருந்தாலோ அவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள். இவர்கள் ரேஷன் கார்டை தாலுகா மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மீறுபவர்கள் மீது  விசாரணைக்கு பின், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அத்துடன், அரசு விதிமுறைகளை மீறியதற்காக குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அதுவரை பெற்ற இலவச ரேஷன் பொருட்களுக்கான பணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web