புதிய புயல் உருவானது... தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை !

 
புயல்
 

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 48 மணி நேரத்தில் தீவிரத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அந்தமான்-நிகோபார் தீவுகளின் அருகே சென்று, பின்னர் தமிழகம்–ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. அடுத்த 4–5 நாட்களில் இது புயலாக உருவாகக்கூடும் என்பதால், ஐஎம்டி தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது.

புயல்

இதன் தாக்கத்தால் இன்று (22.11.2025) தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

புயல்

நாளை (23.11.2025) தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் சில பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கனமழை பதிவாகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதியிலும் தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழைத் தொடர்ந்தும் பெய்யக்கூடும் நிலையில், கடலோர மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!