அரசு ஊழியர்களுக்கு புதிய உறுதியான ஓய்வூதியம்... அரசாணை வெளியீடு!
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 2021 தேர்தலுக்கு முன்பு திமுக அளித்த வாக்குறுதி நிறைவேறாததால், 2026 தேர்தலில் எதிர்ப்பு நிலைப்பாடு எடுக்கப்படும் என ஜாக்டோ–ஜியோ அறிவித்து, காலவரையற்ற போராட்டத்தையும் அறிவித்தது. இதனால் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை ஆய்வு செய்த தமிழக அரசு, ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களின் நலன், மாநிலத்தின் நிதிநிலை மற்றும் எதிர்கால பொறுப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ், கடைசி மாத ஊதியத்தின் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதம் மட்டுமே இருக்கும். மீதமுள்ள தொகையை அரசே ஏற்கும். ஓய்வூதியதாரர் இறந்தால் குடும்பத்திற்கு 60 சதவீத குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். பணியின் போது உயிரிழந்தால் ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படும். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
