ஜூன் 21 முதல் கட்டடக் கழிவுகளுக்கு புதிய வழிகாட்டி நெறிமுறைகள் ... மேயர் பிரியா !
சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் கட்டுமானம் மற்றும் இடிப்பாட்டுக் கழிவுகள் மேலாண்மை சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது பற்றிய பயிலரங்கம் மற்றும் நெகிழி பயன்பாட்டைத் தடை செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைக்குழுக்கள் அடங்கிய பிரச்சார வாகனத்தையும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா துவங்கி வைத்தார்.

துணை மேயர் மகேஷ் குமார் சென்னை மாநகராட்சி தூய்மையாக மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தக் கட்டடக் கழிவுகளை அகற்றும் முறை. கட்டடக்கழிவுகளை தனியார் அமைப்பு மற்றும் அரசு ஒப்பந்த நிறுவனங்களும் உரிய முறையில் அகற்றப்படவில்லை என்றால்கூட அபராதம் விதிக்கப்படும். அரசு ஒப்பந்ததாரர்கள் இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேயர் பிரியா, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியில் ஈடுபட்டதாகவும் அதே போன்று ரிப்பன் மாளிகையிலும் அந்த பணி நடைபெற்றதாகவும் கூறினார். மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பை - மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருப்பதாகவும் , அதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கட்டடக் கழிவுகள் அகற்றுவது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் ர் கூறினார்.
ஜூன் 21 ஆ தேதி இந்த திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது. அதன்படி கட்டடக்கழிவுகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு இருப்பதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடக்கழிவுகள் நடுத்தர கட்டட கழிவுகள் என இருப்பதாகவும் அதிக கட்டடக்கழிவுகள் ஒரு ஏக்கர் அதிகமான இடம் என்றால் ஆறு மீட்டர் தூரத்திற்கு தகரம் மூலம் சுற்றுச் சுவர் அமைத்து அதன் பிறகு தான் அந்த கட்டடங்களை இடிக்க வேண்டும்.
கட்டடங்கள் இடிக்கும் பணியின் போது தகரம் மூடுவது மட்டுமல்லாமல் துணிகளை வைத்து மூட வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது. மாநகராட்சி விதிமுறை மீறி செயல்படும் கட்டடப் பணியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 10 ஆயிரம் மீட்டர் முதல் 25 ஆயிரம்மீட்டர் உள்ள கட்டடங்கள் இடிக்கும்போது அவர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
500 முதல் 20 ஆயிரம் சதுர அகலமுள்ள கட்டடங்கள் இடிக்கும் பொழுது அவர்கள் விதியை பின்பற்றப்படவில்லை என்றால் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராத விதிக்கப்படும். குறைந்தபட்ச கட்டடக்கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

ஒரு மெட்ரிக் டன்னுக்கும் கீழுள்ள கட்டடக்கழிவுகள் பொதுமக்களை அகற்றிக் கொள்ளலாம் அதற்கு மேல் உள்ள கட்டடக்கழிவுகளை மாநகராட்சி தொடர்புக்கு கொண்டு வாகனங்கள் மூலம் அகற்றலாம். கட்டடக்கழிவுகளை அகற்றப்படாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும். 15 நாள் அவகாசத்திற்கு பிறகும் கட்டடக்கழிவுகளை அகற்றாமல் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்படும். 15 மண்டலங்களில் மண்டலத்திற்கு ஒரு பகுதி என்று கட்டடக்கழிவுகள் கொட்டுவதற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு டன்னுக்கு குறைவாக இருந்தால் மக்களே அங்கு கொண்டுசென்று கழிவுகளை கொட்டலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
