33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய வரலாறு!! ஈவிகேஎஸ் அமோக வெற்றி!!

 
ஈவிகேஎஸ்

ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.  பேரறிஞர் அண்ணா, திராவிடர் கழகத்தை விட்டு விலகி திமுகவை தொடங்கியபோது ஈவிகே சம்பத் அவருடன் இணைந்தார். அதன் பிறகு காங்கிரசில் சேர்ந்தார்.ஈவிகேஎஸ் இளங்கோவன் தந்தையுடனே இணைந்து காங்கிரசில் சேர்ந்தார். 1984ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் சத்தியமங்கலம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு திமுகவை விட இருமடங்கு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்

ஈவிகேஎஸ்

தாயார் சுலோச்சனா சம்பத், அதிமுகவின் அமைப்பு செயலாளராக மட்டுமல்ல முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்கு சவால் ஏற்படும் காலங்களில் எல்லாம் அதனை தாங்கி பிடித்தவர் ஈவிகேஎஸ் என்றால் மிகையாகாது.   1996ல் ஜி.கே. மூப்பனார் தனிக்கட்சியை தொடங்கிய போது, காங்கிரஸ் கட்சியிலேயே இருந்த  வெகு சில பேர்களில்  ஈவிகேஎசும் ஒருவர். 2000ல்  முதல்முறையாக காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டார். 2001ல் மூப்பனாரின் மறைவுக்கு பின்னர், அவரது மகன் ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்பியதற்கு இளங்கோவனின் முயற்சிகளே காரணம்.

ஈவிகேஎஸ்
2004ம் ஆண்டு தேர்தலில் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் 2004 முதல் 2009 வரை அவர் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சராக இருந்தார். இதன்பிறகு 3 முறை தொடர் தோல்விகளை சந்தித்தார். இதனால் கடந்த சில வருடங்களாக தேர்தலில் இருந்து ஒதுங்கி இருந்தார். மகனின் உயிரிழப்பிற்கு பிறகு தற்போது நடைபெற்ற  இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் சட்டப்பேரவைக்குள் நுழைகிறார். அவரது தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாடித் தீர்க்கின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web