கடையில் பெயின்ட் வாங்கி பைக் நிறத்தை மாற்றிய பலே திருடன் !! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
ரமேஷ்

நெல்லை மாவட்டம் முக்கூடல் பாலகன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (54). இவர், முக்கூடல் மெயின்ரோடு பகுதியில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ரமேஷ் நேற்று முன்தினம் வீட்டின் முன்பாக தனது பைக்கை நிறுத்திச்சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது பைக் திருடுபோனது கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

எங்கு தேடியும், யாரிடம் கேட்டும் பைக் கிடைக்கவில்லை. இதனையடுத்து பைக் திருடுபோனது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த முக்கூடல் எஸ்ஐ ஆக்னல் விஜய் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ரமேஷ்

இதில் முக்கூடல் காமராஜர் தெருவைச் சேர்ந்த செல்வராஜா (46) என்பவர் சம்பவத்தன்று ரமேஷின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருந்த பைக்கை நைசாக தள்ளிச் சென்றது தெரியவந்தது. 

ரமேஷ்

இதற்கெல்லாம் மேலாக, பைக்கை திருடிய பிறகு ரமேஷின் கடைக்கே சென்று கருப்பு கலர் பெயிண்ட், பிரஸ் உள்ளிட்டவற்றை வாங்கி வந்து திருடிய சிவப்பு நிற பைக்கை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார் செல்வராஜா. அத்துடன் நம்பர் பிளேட்டையும் மாற்றியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web