டி20 உலகக் கோப்பைக்கு புதிய ஜெர்சி... நேபாளம் அணி அசத்தல்!
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
உலகக் கோப்பை தொடர் நெருங்கி வருவதால், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பல அணிகள் தங்களின் புதிய ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. ரசிகர்களிடையே இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான புதிய ஜெர்சியை நேபாளம் அணி வெளியிட்டுள்ளது. நேபாளம் இடம்பெற்றுள்ள ‘சி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் இத்தாலி ஆகிய அணிகள் உள்ளன. இந்த பிரிவில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
